Tuesday, 4 November 2025

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஓடம்

Sri Mahalakshmi Oodam


  1. ஹயக்ரீவ சரஸ்வதியை வாக்குறை செய் லக்ஷ்மி 

  2. அ(ப்ர)க்ஞான ஜோதி ப்ரகாச மய லக்ஷ்மி

  3. அகில ஜகன் மோஹனானந்தமய லக்ஷ்மி

  4. ஆருயிரை பாருயிராய் காக்கும் மஹா லக்ஷ்மி

  5. அண்ட ப்ரம்மாண்டத்தை நிலைநாட்டும் லக்ஷ்மி

  6. தொண்டர் மனக்குடியில்   தோன்றி இருக்கும் லக்ஷ்மி

  7. அன்னமய ப்ராணமய ப்ரம்ம மய லக்ஷ்மி

  8. ஆனந்த நிலைதனிலே அமர்ந்திருக்கும் லக்ஷ்மி

  9. அஷரப் பரம் பொருளாய் ஜொலிக்கும் மஹா லக்ஷ்மி

  10. ஆதியாய் நீதிமறை ஜோதிமய லக்ஷ்மி

  11.    நான்மறை விளக்கேற்றி நாவில் வைக்கும் லக்ஷ்மி

  12. பாலூட்டி என் நாவில் தாலாட்டும் லக்ஷ்மி

  13. பாற்கடல் ராஜனுக்கு பெண்ணான லக்ஷ்மி

  14. காக்கவே உலகத்தில் அவதரித்த லக்ஷ்மி

  15. சுபகரி சுபகுண சுபவதன லக்ஷ்மி

  16. சுந்தரி நிரந்தர வரமருளும் லக்ஷ்மி

  17. ஸந்தான சௌபாக்கியம் அளித்திடும் லக்ஷ்மி

  18. ஸகலவித மங்களம் தந்தருளும் லக்ஷ்மி

  19. சந்திர சகோதரியாய் வந்துதித்த லக்ஷ்மி

  20. ஸந்தாபம் தீர்த்தென்னை காக்கும் மஹா லக்ஷ்மி

  21. காமதேனு போல் கறந்திடும் லக்ஷ்மி

  22. கற்பக விருட்சம் போல் தந்திடும் லக்ஷ்மி

  23. சிந்தாமணி என்றே ஸேவிக்கும் லக்ஷ்மி

  24. சிந்தித்த பேருக்கு சுபமளிக்கும் லக்ஷ்மி

  25. சோகவிடாய்களைத் தீர்த்தருளும் லக்ஷ்மி

  26. சொர்க்க போகங்களை வழங்கிடும் லக்ஷ்மி

  27. தேங்காயின் நீருக்குள் தெளிந்து வரும் லக்ஷ்மி

  28. ஆ(ங்கா)த்திரம் நீக்கியே அடிமை கொள்ளும் லக்ஷ்மி

  29. கற்பூர ஜோதியில் காட்சி தரும் லக்ஷ்மி

  30. கஸ்தூரி பரிமளத்தின் உள்ளிருக்கும் லக்ஷ்மி

  31. குங்குமப் பூவினில் குழம்பி வரும் லக்ஷ்மி

  32. கோரோசனத்திலே குடியிருக்கும் லக்ஷ்மி

  33. பச்சைக் கற்பூரத்தில் பரிமளிக்கும் லக்ஷ்மி

  34. இச்சித்த வரங்களை அளித்திடும் லக்ஷ்மி

  35. நாவுக்கு சுவையான நாமமுடை லக்ஷ்மி

  36. நாநா பதார்த்தங்கள் ஊட்டிடும் லக்ஷ்மி

  37. கண்ணாடி போல் மனத்தை துலக்கிடும் லக்ஷ்மி

  38. கண்ணான கண்மணி போல் ஸேவை தரும் லக்ஷ்மி

  39. காயகல்பம் போல் மருந்தாகும் லக்ஷ்மி

  40. நியாயம் தவறாமல் நடத்தி விடும் லக்ஷ்மி 

  41. பத்மாக்ஷி பத்மமுக பத்மகர லக்ஷ்மி

  42. பத்ம பாதத்துடன் அவதரித்த லக்ஷ்மி

  43. சங்க நிதி பத்ம நிதியான மஹா லக்ஷ்மி

  44. பொங்கியே மங்களமாய் தனம் சொறியும் லக்ஷ்மி

  45. தன்மயமாகவே வாக்கில் வரும் லக்ஷ்மி

  46. தேனாம்ருதம் போல் இனித்திடும் லக்ஷ்மி

  47. கன்னல் கரும்பின் ரஸம் போன்ற லக்ஷ்மி

  48. கருணா கடாக்ஷத்தில் ஆட்கொள்ளும் லக்ஷ்மி

  49. புத்தி கூர்மையுடன் திறமை தரும் லக்ஷ்மி

  50. பற்பல விஷயமாய்க் காட்சி தரும் லக்ஷ்மி

  51. சித்த விநோதங்கள் செய்திடும் லக்ஷ்மி

  52. சதுர்வித புருஷார்த்தம் அளித்திடும் லக்ஷ்மி

  53. பரமனை மனதினில் குடி வைக்கும் லக்ஷ்மி

  54. பக்தர்கள் திரு வாக்கில் நின்றொளிரும் லக்ஷ்மி

  55. ஐஸ்வர்ய கர்வத்தை அடக்கிவிடும் லக்ஷ்மி

  56. ஆலோசனை பெரிதாக செய்திடும் லக்ஷ்மி 

  57. டம்பனை ஜம்பனை துரத்திவிடும் லக்ஷ்மி

  58. அன்பனை இன்பமாய் ஆதரிக்கும் லக்ஷ்மி

  59. துஷ்ட துர்குணங்களை போக்கிவிடும் லக்ஷ்மி

  60. தூணில் உதித்தோனின் மடியிருக்கும் லக்ஷ்மி

  61. ஸகல கலா வல்லியாய் நாவில் வரும் லக்ஷ்மி

  62. ஸகல சாஸ்த்ரங்களை வெளிப்படுத்தும் லக்ஷ்மி

  63. தரும தேவதைகளை நிலைநாட்டும் லக்ஷ்மி

  64. தத்வமய பக்திமய ஞானமய லக்ஷ்மி

  65. தைரிய சௌரிய பராக்ரம லக்ஷ்மி

  66. ஜயவீர வீர்யங்கள் கடாஷிக்கும் லக்ஷ்மி

  67. நெஞ்சை குடைந்ததனில் வீற்றிருக்கும் லக்ஷ்மி

  68. நிர்தனர் வேண்டுதலைக் கேட்டிடும் லக்ஷ்மி 

  69. பூஜித்த பேருக்கு வரமருளும் லக்ஷ்மி

  70. புவன மங்களங்களை பொழிந்திடும் லக்ஷ்மி 

  71. ராஜசபை எலுமிச்சை போன்ற மஹா லக்ஷ்மி 

  72. தேஜோ மயமாகி உருவெடுத்த லக்ஷ்மி 

  73. கு வென்ற இருள் காட்டை ஒழித்திடும் லக்ஷ்மி 

  74. ரு வென்ற ஆசானைக் காவல் வைக்கும் லக்ஷ்மி

  75. முழுப்பகல் நித்திரையை போக்கிவிடும் லக்ஷ்மி 

  76. மூர்த்தியுடன் கீர்த்தியையும் சேர்க்கும் மஹா லக்ஷ்மி 

  77. கொட்டாவி துர்குணங்கள் போக்கிவிடும் லக்ஷ்மி 

  78. எட்டாப் பரம்பொருளை கிட்டவைக்கும் லக்ஷ்மி 

  79. காக்கை முகம் திருப்பி சேர்த்து வைக்கும் லக்ஷ்மி 

  80. கருணை வெள்ளமாய் தயை பெருகும் லக்ஷ்மி

  81. கவிதன்னை புவிதன்னில் பறைசாற்றும் லக்ஷ்மி 

  82. கலங்காது என் மனதைக் காத்தருளும் லக்ஷ்மி  

  83. பூர்வ புண்ணியமாய் பொங்கி வரும் லக்ஷ்மி 

  84. பூலோக லீலைகளைச் செய்தருளும் லக்ஷ்மி

  85. தீர்க்காயுள் தந்து நம்மை வாழ வைக்கும் லக்ஷ்மி

  86. மார்க்கம் பெரிதாகிக் காட்டிவிடும் லக்ஷ்மி

  87. சந்தனக் குழம்பைப் போல் மேனி தரும் லக்ஷ்மி

  88. சந்ததம் திருமாலின் திருமார்பில் வசித்தாளும் லக்ஷ்மி 

  89. ராஜனை வசமாக்கித் தந்திடும் லக்ஷ்மி 

  90. ராஜ்ய போகங்கள் அளித்திடும் லக்ஷ்மி

  91. கனவான பலவற்றை நனவாக்கும் லக்ஷ்மி

  92. கடல் போன்ற தியானத்தை போதிக்கும் லக்ஷ்மி

  93. மூல மந்திர பொருளாய் ஒளிர்ந்திடும் லக்ஷ்மி

  94. ஆலில் அமர்ந்தானை அடைவிக்கும் லக்ஷ்மி 

  95. த்வயத்தினால் உலகத்தை உயிர்பிக்கு லக்ஷ்மி

  96. தயையுடன் பாதத்தில் சேர்த்தருளும் லக்ஷ்மி

  97. ஸ்ரம ஸ்லோகத்தினால் சரணம் தரும் லக்ஷ்மி 

  98. சாஸ்வத பரமபதம் அளித்திடும் லக்ஷ்மி

  99. நெஞ்செனும் மஞ்சத்தில் கொஞ்சிடும் லக்ஷ்மி

  100. பஞ்சேந்த்ரியங்களின் வலிவடக்கும் லக்ஷ்மி

  101. கருணை கிருபை இவைகள் உருவான லக்ஷ்மி

  102. கல்யாண கோலத்தில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி 

  103. பூவினால் பாவினால் பூஜிக்கும்  லக்ஷ்மி

  104. மேவியே நாள்தோறும் மேன்மை தரும் லக்ஷ்மி

  105. ஸ்தோத்திர ப்ரியவதியாய் விளங்கிடும் லக்ஷ்மி

  106. போற்றிடும் பூமியில் புகழ்ந்தோங்கும் லக்ஷ்மி

  107. பணி கொண்டு மண் மீதில் வந்தருளும் லக்ஷ்மி

  108. பரமானந்தமாய் ஸேவை தரும் லக்ஷ்மி 


ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஓடம் நிறைவுற்றது


No comments:

Post a Comment