Sunday, 12 January 2014

திருவிளக்கு ஸ்தோத்ரம்

Thiruvilakku Stotram

விளக்கே  திருவே வேந்தன் உடன் பிறப்பே 
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே 
அந்தி விளக்கே அலங்கார கண்மணியே
காஞ்சி விளக்கே காமாட்சி தேவியரே

பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு 
குளம் போல் நெய்யை விட்டு கோலமுடன்  ஏற்றி வைத்தேன் 
பொட்டு  மிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி வைத்தேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க

வைத்தேன் திருவிளக்கை மாளிகையில் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவை  கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா

பெட்டி  நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா
கொட்டகை நிறைய பசு மாடு தாரும் அம்மா
புகழுடம்பை தந்து  எந்தன் பக்கத்தில்  நில்லும்  அம்மா
அகத்தழிவை  தந்து எந்தன் அகத்தினிலே வாழும் அம்மா

சேவி தொழுது நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சவிரி முடி கண்டேன் தாழைமடல் சூழ கண்டேன்

பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன்  கோவை கனி வாயும் கண்டேன்
செந்தாமரை பூமடல் போல் செவி இரண்டும் கண்டு கொண்டேன்

செண்பக பூப்போல திருமூக்கும் கண்டு கொண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
காலில் சிலம்பு கொஞ்ச காலாழி பீழி கண்டேன்
பட்டாடை தான் உடுத்த படை இரண்டும் கண்டு கொண்டேன்

மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு கொண்டேன்
அன்பே அருண் துணையே உன்னை அடைந்த எந்தனுக்கு
வந்த  வினை அகற்றி மஹா பாக்கியம் தந்தருள்வாய்
தந்தை  தாய்  பிறவி  நீயே தற்காக்கும் ரக்ஷகி  நீயே

அந்தர்திற்கு உதவி செய்யும் ஆதாரமானவள்  நீயே
உன்தனையே  உறவாக நம்பி உற்றாரை கை விட்டேன் தாயே
சந்தானம்  சௌபாக்கியம் அளித்து
சக்திகளும் சேவைகளும் எனக்கருள்வாய்
பக்தி உள்ள மனிதருக்கே பர தேவி க்ருபையுடன் அருள்வாய்

No comments:

Post a Comment