Tuesday, 28 July 2015

ராகுகால துர்க்கா அஷ்டகம்

Rahukaala Dhurga Ashtakam

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா  தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே.

உலகை ஈன்றவள் துர்க்கா உமையும் ஆனவள்
உண்மை ஆனவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே

(தேவி)

செம்மையானவள் துர்க்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்க்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே

(தேவி)

உயிருமானவள் துர்க்கா உடலும் ஆனவள்
உலகமானவள் எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே

  (தேவி)

துன்பம் அற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி ஆனவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே

  (தேவி)

குருவும் ஆனவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே

  (தேவி)

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே

  (தேவி)

கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே

  (தேவி)

No comments:

Post a Comment