Tuesday, 7 July 2015

ஸ்ரீ காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம்

Sri Kamakshi Dhuka Nivarana Ashtakam


மங்கள ரூபிணி மதி அணி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
சங்கரி சௌந்தரியே |
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி ||


கானுறு மலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தார் ஒளி மதிஒளி
தாங்கியே வீசிடுவாள் |
மானுறு விழியாள்  மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்

(ஜெய) 

சங்கரி ஸௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே |
எங்குலத் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்தநல் துர்க்கையளே

(ஜெய)

தண தண தந்தண தவில் ஒளி  முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிர் ஒளி வீசிடக்
கண்மணி நீ வருவாய் |
பண பண பம்பண பறை ஒலி கூவிடப்
பண்மணி நீ வருவாய்

(ஜெய)

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே |
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல்
சக்தி எனும் மாயே

(ஜெய)

எண்ணிய படி நீ அருளிட வருவாய்
எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய் |
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே

(ஜெய)

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய் |
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய் 

(ஜெய)

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி |
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி ||
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி |

(ஜெய)

5 comments:

  1. Please help me if possible....5th stanza 3rd line can't sing in ragam properly ....sakti yennum maaye.... pls help...Is any word missing there...

    ReplyDelete
    Replies
    1. May be because of the spelling mistakes.
      சமரது செய்தநல் சக்தி எனும் மாயே..

      Delete
    2. Mr.Bala has given the exact answer.

      Delete
    3. பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
      பஞ்சநல் பாணியளே
      கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
      கொடுத்த நல் குமரியளே
      சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
      நல் சக்தி எனும் மாயே

      Delete
  2. Thnx Mr. Bala. Everyday I sing this but wen I say 5th stanza little bit thadumaral is there.sorry today only saw ur comment n reciprocated.
    Thnx

    ReplyDelete